கனவுகள் முட்டுகிறது - சகா
காலியான விதையில்
கனவுகள் முட்டுகிறது
மரங்களாய்...
முறையிலா ஆனந்தத்தில்
முடிவுகள் தெரிகிறது
மரணங்களாய்...
உறக்கச் சல்லடையில்
கனவுகள் நின்றது
தொல்லைகளாய்...
சாக்கடைச் சமூகத்தில்
சுறாக்கள் மிதக்கிறது
மதங்களாய்...
சில்லறைச் சந்தையில்
கவிதைகள் பிறந்தது
கனவுகளாய்...
திங்கள் வெளிச்சத்தில்
ஞாயிறு கலைந்தது
விடியலாய்...