இன்று என்ன செய்தாய் நண்பா?
இன்று என்ன செய்தாய் நண்பா?
சற்று கணக்குப் பார்.
நன்று செய்தாய் என்பேன்,
பொன்னே அனைய பொழுதைப்,
போக்காமல்..... அதன் பொலிவை நீக்காமல்....
மின்னே அனைய வேகத்தில்,
ஆக்கமிகு ஆற்றல்களால்,
அகிலத்தில் உன் சுவடுகளைப் பதிப்பாய்!
மதிப்பாய் மிளிரும் செயல்களால்,
உதிப்பாய் உலகிலே....ஒளிர்வாய் உயரத்தில்!
பாலு குருசுவாமி.