என்றுமே எனது கிராமம் தான்

வெள்ளாமையில் எழுந்து ...,
வேட்டி தலப்பா கட்டி....,,
ஏர் கலப்பை எடுத்து,மாடு ரெண்டு பூட்டி
வயலுக்கு போனதுண்டா?

பழைய கஞ்சிக்கு பச்சை மிளகாயும்,வெங்காயம் வைத்து
காலையில் பருகியதுண்டா?

கேணித்தன்னியை இறைத்து ஊற்றி நஞ்சை அடித்து நாற்று நட்டதுண்டா?

உச்சி வெயிலில்,களத்து மேட்டில் கதிரடிக்கும்
மாமனுக்கு வத்தகுலம்பும்,முருங்கை கீரையும் வைத்து உருண்ட பிடிச்சி கொடுக்கும் மனைவியின் பாசத்தை பார்த்ததுண்டா?
பள்ளிக்கு போன பிள்ளை ,
பசியோட வருவான்னு,
எரியாத அடுப்பில் ஊதி ஊதி,
சமைத்து வைக்கும் தாயை கண்டதுண்டா?
மண்ணை பொன்னாகி,
பசியை பாசமாக்கி ,
பறவைகள் போல,
சந்தோஷசமா வாழும்,
எங்கள் கிராமத்து வாழ்க்கையை,
உங்கள் நகரம் கொடுத்ததுண்டா?

எழுதியவர் : ஆசைதம்பி (5-Jun-11, 1:51 am)
பார்வை : 1813

மேலே