என்னை மறந்து விடு

மறக்க முடியாத நினைவுகளையும்
இறக்க முடியாத சுமைகளையும்
உனக்கு தந்த
இந்த இரக்க மற்றவளை
மறந்து விடு.
என் உலகமே உனக்குள் தான்
ஒளிந்து இருக்கிறது என்றேன்..
என்னையே உலகமாக நினைத்து
வாழும் என் குடும்பத்தை மறந்து...
உன் கரம்பிடித்து நடக்கும்
பகல் கனவு கண்டேன்....
இரவை பகலாக்கி
எனக்காய் உழைத்த
என் அம்மாவை மறந்து....
உனக்கு முன்னால் மட்டுமே
என் தைரியம் உருவம் கொள்கிறது..
ஆனால்,
உண்மையில் நான் ஒரு கோழை...!
என் அன்னையின் கண்ணீரில்
நம் காதலை கரைத்துவிட்ட
நான் கோழைதான்...
அப்பாவை இழந்து தவிக்கும்
என் குடும்பத்தில்
மிச்சம் மீது எஞ்சிஇருப்பது
மானமும் மரியாதையுமே..!
அதை உடைத்தெறிந்து விட்டு
உன்னுடன் வந்தால்..
மானம் போனதென்று
மறித்து விடும் என் குடும்பம்...
என் குடும்பத்துக்கே
கொல்லி வைத்துவிட்டு
உன் காதல் மனைவியாக வாழ்வதை விட,
உன் ஒருவனை மட்டும் இழந்து,
உனக்கு துரோகம் செய்த
உன் பழைய காதலியாய்
வாழவே விழைகிறேன் நான்...!
ஆதலால்,
உன்னை மறக்க முடியாமல் தவிக்கும்
இந்த பாவப்பட்ட பிறவியை..
மறந்து விடு....
முடிந்தால் மன்னித்து விடு...

எழுதியவர் : காயத்ரிசேகர் (25-Oct-15, 12:24 pm)
Tanglish : maranthu vidu ennai
பார்வை : 416

மேலே