சுயநல பூமி
காத்திருந்து காத்திருந்து
கண்ணீர் விட்டேன்
இந்த கலியுகத்தில்
அன்பிற்கு காத்திருந்து
கண்ணீர் விட்டேன்
கருநாக தீண்டல் போல்
கடுஞ்சொற்கள் பேசிடுவார்
கடைந்தெடுத்த அமுதம் போல்
கனிமொழிகள் பேசிடுவார்
செய்யாத செயலுக்கு
வீண்பழியை சுமத்திடுவார்
செய்த நன்மைக்கு
நன்றியென்று கூறமாட்டார்
முகத்துக்கு நேராக
புன்முறுவல் பூத்திடுவார்
போகவிட்டு புறஞ்சொல்லி
வதந்திகளை பரப்பிடுவார்
இந்த உலகம் நாடக மேடை
உண்மைதான் அத்தனை பேரும் நடிகர்கள்
நானும்தான் ! நடித்துவிட்டு வருந்துகிறேன்
உள்ளுக்குள் குமுறுகிறேன்
சுயநலமும் நயவஞ்சகமும்
சூழ்ந்துள்ள உலகத்தில்
உண்மைக்கு வழியில்லை
போலிக்கே பாராட்டு
இந்த பாழும் உலகில்
பாவை எனக்கு
எத்தனை நாள் பயணமோ ?