பாலியல் பலாத்காரம்

செய்தித்தாளில் தினந்தோறும்
பாலியல் பலாத்காரம்
நடந்தது யாருக்கு ?

" பால்மணம் மாறா குழந்தை
பள்ளி செல்லும் மாணவி
கல்லூரி செல்லும் யுவதி
பணிக்கு செல்லும் பெண்கள்
கணவனை இழந்த கைம்பெண்
வயதான மூதாட்டி "

ஐந்திலிருந்து ஐம்பது வரை
எவருக்கும் பாதுகாப்பில்லை

செய்தது யார் ?

"பள்ளி பயிலும் மாணவன்
பக்கத்துக்கு வீட்டு பையன்
கூட படிக்கும் தோழன்
உடன் பணிபுரிபவர்
வீட்டில் குடியிருப்பவர்
சொந்த தகப்பன் "

மிருகங்கள் கூட இனம் கண்டு கொள்ளலாம்
இன்னது விஷம் என்று
மனித மிருகங்களை முடியவில்லை.
எச்சரிக்கையாய் இருக்க

மண் திண்ணும் இந்த பெண்ணுடலை
பேரழகாய் பார்க்கும் இந்த பிணம் தின்னும் கழுகுகள்
குத்தி கிழிப்பதெங்கள் உடல்களை அல்ல மனங்களை
உயிர் போகும் வரை ஆறுவதேயில்லை அந்த காயங்கள்

உங்களுக்கும் உயிர் கொடுத்து இந்த உலகத்தில் உலவ விட்டதற்கு
அவமானப்படுகிறார்கள் அத்தனை தாய்களும்.

எழுதியவர் : (26-Oct-15, 12:38 am)
சேர்த்தது : சங்கீதா வ
பார்வை : 597

மேலே