பாவையின் பார்வையில் பாவெனும் மௌனம்
பெண்ணின்
கவிதைகளுக்கு
பெரும்பாலும்
எழுத்து வடிவம்
இருப்பதில்லை......!
மன சிலேட்டில்
எழுதி எழுதி
அழித்துக் கொள்கிறாள்....
எவரும்
படிக்க அவள்
அனுமதிப்பதேயில்லை....
அவளின் கவிதைகளை
கண்ணீர்த் துளிகள்கொண்டே
அழிக்கிறாள் என்பதும் யாரும்
அறியப்படாத ஒன்று.....!