சபிக்காதே
என்னவெல்லாமோ
எதிர்பார்ப்புகள்..
விதைகளாக !
விளைந்தன சஞ்சலங்கள்..
அமைதி ரோஜாவை மட்டும்
பதியனிட..
அழகும்
அமைதியாக வளர்ந்தது ...
அந்த அமைதியும்
அழகாக இருந்தது..!
மழைக்காக ஏங்கும் நீங்கள்
குடை ஒன்று தயாராக
வைத்துக் கொள்ளுங்கள்..
அப்போதுதான்
அது திடீரென வரும்போது
அதை ..
சபிக்க மாட்டீர்கள்..!
நனைவதை விரும்புபவர் சபிப்பதில்லை..
சபிப்பவர் நனைவதை விரும்புவதில்லை..
உனக்கு பூக்களின் வாசம்
பிடிக்கவில்லை ..என்றால்
பரவாயில்லை!
அதற்காக ..
பூக்கடைப் பக்கம்
உன் சாக்கடையை திருப்பாதே !