மொழிந்திடுவேன் திருமணங்கள் மொழியில்லா மௌனங்கள் --- தரவு கொச்சகக் கலிப்பா
கவிதைசொலும் இலக்கணமும் கல்யாண இலக்கணமும்
நவிலுமொழி யொன்றென்றே நட்பாகச் சொல்லிடுவேன் .
குவித்தகரம் கொண்டுசொலும் குவலயத்தின் கோயில்கள்
செவிகளிலே செப்பிடுமே செழிப்பான நன்னெறிகள் .
உடலின்பம் காணுகின்ற உணர்ச்சியினி லின்பமில்லை
கடலின்பம் கண்டுவிட்ட காட்சியினைப் போன்றதொரு
இடரில்லா இன்பத்தை ஈனுகின்ற புணர்ச்சியினில்
கடனில்லா வாழ்வுதன்னைக் காசினியில் பெற்றிடுவர் .
அழிந்திடுமே யாக்கையிந்த ழகினிலுமே ஆசைகொண்டு
ஒழிந்திடுவாய் குணத்தினாலே ஒன்றிடாம லில்லறத்தில்
வழிந்திடுமே துன்பங்கள் வளமையினைக் குறைத்துவிடும் .
மொழிந்திடுவேன் திருமணங்கள் மொழியில்லா மௌனங்கள் .