100நூறு

நான் நூறு ரூபாய் வந்திருக்கன்
பாரு நல்லாப் பாரு
என்னைப் பற்றி கொஞ்சம் கூறு
ஓ..ஓ.இது புதுசா இருக்கே
சொல்லுரன் கேளு
இலங்கை எங்கள் நாடு
சதங்கையோடு பரதமாடும் மாது
தத்தித்தாதா....
என தாளம் போடும் ஆளு
தமிழர் கலையும் சேந்திருக்கு
ஆனால் தாமிழர் வாழ்வுதான்
விடிவதில் தாமதம்

அபிவிருத்தி நோக்கிய பயனம்
நுரச்சோலை நிலையமூம்
நீர்வீழ்ச்சி பாய்ந்தோடுது
இருந்தும் ஏழைகளின் வயிறும்
வாடுது

பட்டாம்பூச்சியும்,குருவியும்
கவலையுடன்
இருப்பதுபோல் தோன்றுது
இது என்னையும் குறிக்கும்
வண்ணம் தீட்டி
வரிகளும் கீறி இருக்கு
நீ வடிவாதான் இருக்க
நீ இல்லாவிட்டால்தான்
கவலை.
நான் சொன்னது புரியுதா?

எழுதியவர் : தேகதாஸ் (27-Oct-15, 11:08 am)
சேர்த்தது : தேகதாஸ்
பார்வை : 118

மேலே