அவளும் நானும்

அவள் துடைத்து வைத்த
பாத்திரங்கள் எல்லாம்
பளபளப்பாகவே இருந்தது
அவள்தான் கலையிழந்து இருந்தாள்
எனக்கு வாரம் இருநாள்
விடுப்பு இருந்தது
ஆனால் நான் மட்டும் தான்
உழைக்கிறேன் என்று கோபமிருந்தது
அவளுக்கு விடுப்பு இல்லை
தினமும் அடுப்படி தான்
படுக்கையறை அவளுக்கு
நிச்சயம் வசந்தமாக
இருந்திருக்காது
ஆனால் எனக்கு வசந்தம்
தர தவறியதில்லை
நான் அதில்
ஓய்வு அடைந்தேன்
அவள் அங்கும் தேய்ந்தே
உடைந்திருப்பாள்
இது வரை கணவனாக
இருந்தேன் ஆம்
அவள் மனைவியாக
இருந்தாள்
இனியாவது நான் மனிதனாய்
நடக்கிறேன் அவளும்
மனிதம் தானே

எழுதியவர் : கவியரசன் (27-Oct-15, 2:01 pm)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : avalum naanum
பார்வை : 129

மேலே