18 காதல் கவிதைகள்

விதைத்தவனுக்கே
விளையும் பயிர் சொந்தம்
இன்று என்னுள் வளர்ந்து
இருக்கும் காதல் எனும் பயிர்
அன்று உன் விழிகளால்
விதைக்கப்பட்டது!
விந்தையானவனே
விதைப்பதை மட்டும் செய்துவிட்டு
விழி மூடி சென்று விட்டால்
அறுவடைக்கு நான்
யாரை கூப்பிடுவேன்!