தாயின் ஏக்கம்
![](https://eluthu.com/images/loading.gif)
பெத்தெடுத்த என்புள்ள ,
தாய் தேடி கதறி அழ,
கடங்காரன் வருவாநேனு ,
கல் சுமக்க நான் போனேன்!!
உறவுக்காறேன் ஒருத்தேன் இல்ல ,
உக்காந்து பாத்துகிட,
பசிச்சா சோறு ஊட்ட ,
பக்கத்துல நானும் இல்ல!!
உண்ணும் சோறு,
தொண்டை குழி போகயில ,
என்புள்ள உன்னலயெங்குர,
ஏக்கம் வந்து அடைகுதையா!!
தனிமையில வாடி நின்னேன் ,
தன்னீர நான் குடிச்சி,
உனக்காக உறவாட ,
உன் தாயி நான் காத்திருக்க ,
தங்கமே நீ கலங்காதேனு,
உன் நினைவாள நான் அழுதேன் !!