கனவு கன்னி 555

அவள்...

அழகு அள்ளி தெளித்த அரங்கம்
சுகங்கள் கொட்டிகிடக்கும் சுரங்கம்...

அவள் அங்கம் சொக்க தங்கம்
ஒரு பொங்கும் மின்னல் சங்கம்...

இளமை துள்ளி
குதிக்கும் உருவம்...

எதையோ சொல்ல
துடிக்கும் பருவம்...

கரும் புருவம் கரும்பு உருவம்
அதில் உருகும் இளைஞர் கருவம்...

அது அவனவன்
கனவு கன்னியின் பூ முகம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (28-Oct-15, 6:58 pm)
பார்வை : 432

மேலே