அறிவை ஆயுதங்களாக்கு
அறிவை ஆயுதங்களாக்கு
கரடு முரடாய்
காலை இடறும்
சில கரும் பாறைகள்
அறிவெனும் உளி கொண்டு
அவற்றை செதுக்கு !
காற்றின் திசைக்கேற்ப
கண்டபடி ஆடும்
சில காலிக் குடங்கள்
அறிவெனும் நீர் ஊற்றி
அவற்றை நிரப்பு !
துருப் பிடிக்கவே
இறுகிக் கிடக்கும்
சில இரும்புத் துண்டுகள்
அறிவெனும் தணல் மூட்டி
அவற்றை இளக்கு !
அறியாமை முள்ளால்
கிழிந்து கிடக்கும்
அங்கங்கே சில ஆடைகள்
அறிவெனும் ஊசிநூல் நுழைத்து
தைத்திடுஅவற்றை இணைத்து !
- ருக்மணி