கவிஞர் ருக்மணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிஞர் ருக்மணி
இடம்:  வேலூர்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Sep-2015
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  12

என்னைப் பற்றி...

Name: D.Ruckmani Education: M.A. M.Phil. B.Ed. Ph.D., Occupation: Assistant Professor, Dept. of ஹிச்டோரி Literary Orator: Orator and Lecturer in all kinds of Tamil Literature and Socio - Economic Themes. Trainer and Consultant: Human Resource Management, Personality Development and Motivational Trainer for Individuals and Groups, Corporate trainer for Soft Skills. Some of the Companies getting Training: Rmkv Tirunelveli, Kovai, Chennai, Paavai Group of Colleges RasiPuram, Royal Park Erode, Praba Engineers Osur, Tata Gold, Titan Watch, Various Schools and Colleges in and around Tamil Nadu etc.,rnrnEditor: “Vetrichigaram” Tamil Monthly MagazinernAuthor:rn• “Villenthiya Puraakkal” (Poems in Tamil) rn• Sindhu Samaveli Naagariga Varalaru (History of Indus Valley Civilization) rn• “Indhiya Varalaru Kanda Inaiyilla Arasigal” rn• “Constitutional History of India” -An Introduction rn• “Sigarathin Padikkattugal” rnrnTV Programs: Giving Tamil Oratorical literary programs on all Tamil TV Channels rnrnFounder: IMAYAM HUMAN RESOURCE MANAGEMENT INSTITUTE at VELLORE rnMember: World Tamil Writers Association, Vellore Tamil Sangam, Voluntary Workers Organization, Vellore, JCI Vaniyambadi Palar, Sigaram Educational Committee. rnAwards: Best Orator -2008 Best Poetess by Mahatma Trust, “Sadhanai Nayaki” by Raj TV, Best Trainer by Rrase Eng.College. “Nallasiriyar” by Chennai Lions Club etc.rnMentor: Study, Learning, Exam Orientation and Career Guidance rnVisiting Faculty: Life Skills, Business Communication, Reasoning and Marketingrn rnCounselor: For Students, Teachers, Family Issues, Business Issues, Personal Issuesrn E-mail: ruckki70@yahoo.co.in vetrichigaram@gmail.com rn rn Blog: http://vetripadikkattugal.blogspot.in/ Youtube: kavignar ruckmani

என் படைப்புகள்
கவிஞர் ருக்மணி செய்திகள்
கவிஞர் ருக்மணி - கவிஞர் ருக்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2015 10:46 pm

கல்லாத்தான் நிப்பீங்களா?

நீதியில்லையா? நியாயமில்லையா?
அய்யோ இதை கேப்பாரில்லையா?
இது நாட்டுக்குவந்த கேடா ! - எங்க
வீட்டுக்கு வந்த கேடா ! - அய்யய்யோ
தருமம் செத்துப் போச்சா? - எங்களுக்கு
கருமம் செய்யப் போச்சா?
அய்யோ எங்க மண்ணும்
உசுரும் போகப் போகுதே!
அய்யோ எங்க மாடும்
ஆடும் சாகப் போகுதே!
அவசரமா சட்டம் போட்டு
எங்க வயித்தில அடிக்கிறாங்களே!
எங்களைக் கூட கேக்காம
எங்க நெலத்தை பறிக்கிறாங்களே!
நெல்ல வெளச்சி ஊருக்கெல்லாம்
அரிசி தந்த எங்களுக்குத்தான்
ஊரக்கூட்டி வாய்க்கரிசி போடுறாங்களே!
பட்டாபோட்டு வாங்கப்போகுதே சர்க்காரு
பரிஞ்சிபேச எங்களுக்காரு இருக்காரு?
ஏழைபாழை கூலி வெவசாயிங்க

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜின்னா. சமூகம் சார்ந்த சிந்தனைக் கவிகள் தொடரும். 29-Oct-2015 10:00 pm
கருத்துக்களுக்கு நன்றி ஜெயபாலன். 29-Oct-2015 9:58 pm
உங்கள் கவிதை அருமை! ஏழை மக்களின் அவலங்களையும், ஓலங்களையும் நாட்டுப்புறப் பாடலாய் வடித்துள்ளீர்கள்.ஏற்கனவே இறைவனும் கல்லாகிவிட்டான்.இப்போது மனிதனும் கல்லாகிவிட்டான்.உங்கள் நாட்டுப்புறப் பாடல் நாட்டுக்குள் பாயட்டும் .கல்லுக்குக் காதுகேட்க வைப்போம் 29-Oct-2015 11:36 am
நல்ல கவிதை... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Oct-2015 1:03 am
கவிஞர் ருக்மணி - கவிஞர் ருக்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2015 10:37 pm

கிழிந்த கூச்சம்

ஒட்டுப் போட்டு
தைத்தப் பின்னரும்
இழுத்துச் செருகும்வேளை
மீண்டுமாய் எப்படியோ
கிழிந்துவிடுகிறது
பரிமளாவின் பாவாடை !
தண்ணீர் குடம்தூக்கி
தலையில் வைத்தபோது
சனியன்பிடித்த சட்டையும்
கிழிந்துப் போனது !
தலைக்குடத்தை வலதுகையும்
இடுப்புக்குடத்தை இடதுகையும்
தாங்கி நடக்கையில்
கிழிந்த துணியின்வழி
ஏற்படும் கூச்சத்தை
எதிர்கொள்ள முடியாமல்
பரிதவித்தாள் பரிமளா !
ஐயாயிரம் ரூபாய்
ஜீன்ஸ்பேண்ட்டில்
ஐந்தாறு இடத்தில் கிழிசலிட்டு
சிரித்துச் சிரித்துப்
பேசிக்கொண்டிருந்தாள்
ஒரு புதுமுகம்
தொலைக்காட்சியில் !
-ருக்மணி.

மேலும்

கருத்துக்களுக்கு நன்றி அஜீத். 29-Oct-2015 9:53 pm
பார்வை பளீச் ...!! விசாலமாய் விண்ணை தொடுகிறது எண்ணம் !! 29-Oct-2015 4:13 pm
கவிஞர் ருக்மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2015 9:49 pm

உரையாடும் நினைவுகள்

என்னோடு
பேசுவதில்லையென
எப்போதாவதான நம்
உரையாடலைக் கூட
நீ நிறுத்திவிட்டாலும்
வாசிக்கும் போதும்
வாழ்வுச் சூழலிலும்
உன்பெயர் கொண்ட
யாரோ ஒருவரைக்
கடக்கும் நேரம்
ஓடிவந்து
உரையாடுகின்றன
உன்னுடனான
என் நினைவுகள்
உனக்கும்
அப்படித்தானே !
- ருக்மணி

மேலும்

கவிஞர் ருக்மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2015 10:46 pm

கல்லாத்தான் நிப்பீங்களா?

நீதியில்லையா? நியாயமில்லையா?
அய்யோ இதை கேப்பாரில்லையா?
இது நாட்டுக்குவந்த கேடா ! - எங்க
வீட்டுக்கு வந்த கேடா ! - அய்யய்யோ
தருமம் செத்துப் போச்சா? - எங்களுக்கு
கருமம் செய்யப் போச்சா?
அய்யோ எங்க மண்ணும்
உசுரும் போகப் போகுதே!
அய்யோ எங்க மாடும்
ஆடும் சாகப் போகுதே!
அவசரமா சட்டம் போட்டு
எங்க வயித்தில அடிக்கிறாங்களே!
எங்களைக் கூட கேக்காம
எங்க நெலத்தை பறிக்கிறாங்களே!
நெல்ல வெளச்சி ஊருக்கெல்லாம்
அரிசி தந்த எங்களுக்குத்தான்
ஊரக்கூட்டி வாய்க்கரிசி போடுறாங்களே!
பட்டாபோட்டு வாங்கப்போகுதே சர்க்காரு
பரிஞ்சிபேச எங்களுக்காரு இருக்காரு?
ஏழைபாழை கூலி வெவசாயிங்க

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜின்னா. சமூகம் சார்ந்த சிந்தனைக் கவிகள் தொடரும். 29-Oct-2015 10:00 pm
கருத்துக்களுக்கு நன்றி ஜெயபாலன். 29-Oct-2015 9:58 pm
உங்கள் கவிதை அருமை! ஏழை மக்களின் அவலங்களையும், ஓலங்களையும் நாட்டுப்புறப் பாடலாய் வடித்துள்ளீர்கள்.ஏற்கனவே இறைவனும் கல்லாகிவிட்டான்.இப்போது மனிதனும் கல்லாகிவிட்டான்.உங்கள் நாட்டுப்புறப் பாடல் நாட்டுக்குள் பாயட்டும் .கல்லுக்குக் காதுகேட்க வைப்போம் 29-Oct-2015 11:36 am
நல்ல கவிதை... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Oct-2015 1:03 am
கவிஞர் ருக்மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2015 10:37 pm

கிழிந்த கூச்சம்

ஒட்டுப் போட்டு
தைத்தப் பின்னரும்
இழுத்துச் செருகும்வேளை
மீண்டுமாய் எப்படியோ
கிழிந்துவிடுகிறது
பரிமளாவின் பாவாடை !
தண்ணீர் குடம்தூக்கி
தலையில் வைத்தபோது
சனியன்பிடித்த சட்டையும்
கிழிந்துப் போனது !
தலைக்குடத்தை வலதுகையும்
இடுப்புக்குடத்தை இடதுகையும்
தாங்கி நடக்கையில்
கிழிந்த துணியின்வழி
ஏற்படும் கூச்சத்தை
எதிர்கொள்ள முடியாமல்
பரிதவித்தாள் பரிமளா !
ஐயாயிரம் ரூபாய்
ஜீன்ஸ்பேண்ட்டில்
ஐந்தாறு இடத்தில் கிழிசலிட்டு
சிரித்துச் சிரித்துப்
பேசிக்கொண்டிருந்தாள்
ஒரு புதுமுகம்
தொலைக்காட்சியில் !
-ருக்மணி.

மேலும்

கருத்துக்களுக்கு நன்றி அஜீத். 29-Oct-2015 9:53 pm
பார்வை பளீச் ...!! விசாலமாய் விண்ணை தொடுகிறது எண்ணம் !! 29-Oct-2015 4:13 pm
கவிஞர் ருக்மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2015 10:15 pm

அறிவை ஆயுதங்களாக்கு

கரடு முரடாய்
காலை இடறும்
சில கரும் பாறைகள்
அறிவெனும் உளி கொண்டு
அவற்றை செதுக்கு !

காற்றின் திசைக்கேற்ப
கண்டபடி ஆடும்
சில காலிக் குடங்கள்
அறிவெனும் நீர் ஊற்றி
அவற்றை நிரப்பு !

துருப் பிடிக்கவே
இறுகிக் கிடக்கும்
சில இரும்புத் துண்டுகள்
அறிவெனும் தணல் மூட்டி
அவற்றை இளக்கு !

அறியாமை முள்ளால்
கிழிந்து கிடக்கும்
அங்கங்கே சில ஆடைகள்
அறிவெனும் ஊசிநூல் நுழைத்து
தைத்திடுஅவற்றை இணைத்து !

- ருக்மணி

மேலும்

கவிஞர் ருக்மணி - கவிஞர் ருக்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2015 12:00 am

பாலியல் வணிகத்திற்கு
பருவப் பிஞ்சுகள் கடத்தல் !
காமவான்களின் பசிக்கு
கன்னிப் பெண்கள் இரை !

வறுமை விலைபேசலில்
வாழ்வின் வசந்தங்கள் தொலைப்பு !
வித்தைத் தின்னும்
விவசாயி போல் பிழைப்பு !

ஒருவாய்க்கும் வருவாய்க்கும்
பண முதலைகளின் பெருவாய்க்கும்
வலியோடும் வேதனையோடும்
வயிற்றுக் கரு கலைப்பு !

மரகதவல்லி மீனாட்சி
மாநகரில் விமானத்தின் கீழ் !
மனம் நொந்த மீனாட்சிகளோ
மாபெரும் அவமானத்தின் கீழ் !

கோயிலுக்கும் குறைவில்லை
குட முழுக்கிற்கும் குறைவில்லை !
பக்திக்கிங்கே பஞ்சமில்லை
பள்ளிவாசல் தேவாலயங்கள் கொஞ்சமில்லை !

அம்மன்களுக்கு இங்கே
ஆண்டுதோறும் அழகாய் திருமணம் !
அடிமைப்பட்ட

மேலும்

சமூகப்பார்வை... அருமை... 21-Nov-2015 8:41 am
உங்கள் பாராட்டிற்கு நன்றி திரு. கோபிநாதன். 28-Oct-2015 9:59 pm
சிறப்பான கவிதை கவிஞர் ருக்மணி அவர்களே.... சமூகத்திற்கு உங்கள் கவிதை ஒரு சாட்டையடி... என் மனமார்ந்த பாராட்டுகள்... 28-Oct-2015 12:10 am
மேலும்...
கருத்துகள்

மேலே