கிழிந்த கூச்சம்

கிழிந்த கூச்சம்

ஒட்டுப் போட்டு
தைத்தப் பின்னரும்
இழுத்துச் செருகும்வேளை
மீண்டுமாய் எப்படியோ
கிழிந்துவிடுகிறது
பரிமளாவின் பாவாடை !
தண்ணீர் குடம்தூக்கி
தலையில் வைத்தபோது
சனியன்பிடித்த சட்டையும்
கிழிந்துப் போனது !
தலைக்குடத்தை வலதுகையும்
இடுப்புக்குடத்தை இடதுகையும்
தாங்கி நடக்கையில்
கிழிந்த துணியின்வழி
ஏற்படும் கூச்சத்தை
எதிர்கொள்ள முடியாமல்
பரிதவித்தாள் பரிமளா !
ஐயாயிரம் ரூபாய்
ஜீன்ஸ்பேண்ட்டில்
ஐந்தாறு இடத்தில் கிழிசலிட்டு
சிரித்துச் சிரித்துப்
பேசிக்கொண்டிருந்தாள்
ஒரு புதுமுகம்
தொலைக்காட்சியில் !
-ருக்மணி.

எழுதியவர் : கவிஞர் ருக்மணி (28-Oct-15, 10:37 pm)
பார்வை : 113

மேலே