உரையாடும் நினைவுகள்
உரையாடும் நினைவுகள்
என்னோடு
பேசுவதில்லையென
எப்போதாவதான நம்
உரையாடலைக் கூட
நீ நிறுத்திவிட்டாலும்
வாசிக்கும் போதும்
வாழ்வுச் சூழலிலும்
உன்பெயர் கொண்ட
யாரோ ஒருவரைக்
கடக்கும் நேரம்
ஓடிவந்து
உரையாடுகின்றன
உன்னுடனான
என் நினைவுகள்
உனக்கும்
அப்படித்தானே !
- ருக்மணி