காதல் யாத்திரை

விட்டு விட்டு சென்று விட்டாய்,
திரவியம் தான் உனக்கு முக்கியம்,
திரைகடல் தாண்டி சென்ற உன்னை
திசைகள் எல்லாம் தேடித்தவிக்கிறேன்...

அழகு ஈர்ப்பில்
ஆசை தூண்டிலில்
இணைந்த நமக்கு
இந்தப்பிரிவு எத்தனை சீக்கிரம்?

காதல் யாத்திரையில்
நான் இந்தக்கரையில்,
நீயோ அக்கரையில்...

காதல் சுமந்து நானோ
இங்கே தூண்டில் மீனாய்...
காலம் கனியட்டும் என்று
கடமையில் நீ அங்கு திரியும் மானாய்..

வேறு ஒரு தூண்டில்
விலாசம் தேடி வந்து என்னை
நெருங்குகிறது,
நெருக்குகிறது,
உறுத்துகிறது, எனக்குள்
உதறுகிறது...

என்னை நான் எப்படி
காப்பேன்,
என் மனதை எப்படி
மீட்பேன்?

உன்னிடம்
பகிரப்படாத துயரங்கள்
இங்கே
இரை தேடும் ஆந்தைகளாய்
என் ராத்திரிப் பொழுதுகளை
உண்டு களிக்கின்றன;

உனக்காக
சொல்லமுடியாத விபரங்கள்
பதிவில் ஏற்றாமல்
பகிரவும் முடியாமல்
என் எழுத்து தும்மல்கள்
வெளியில் விடாமல்
எனக்குள் உறிஞ்சிக்கொண்டே
ஒருக்களித்துக்கிடக்கிறேன்...

ஓடி வா, ஓடி வா....சீக்கிரம்,
நான் உனக்கு மாத்திரம்.....

எழுதியவர் : செல்வமணி (29-Oct-15, 9:40 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kaadhal yaaththirai
பார்வை : 92

மேலே