தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து
கர்காலமாம் ஐப்பசியில் பிறந்தவள் நீ
கார்முகில் வண்ணனின் அழகை ஒத்தவள் நீ
சுட்டித்தனம் மிகுந்து இருந்தவள் நீ
கல்வியிலே சிறந்து விளங்கியவள் நீ
தமிழ் மொழியின்பால் ஆர்வம் கொண்டவள் நீ
பேச்சுப் போட்டிகளிலே பல பரிசுகள் பெற்றவள் நீ
தங்கையிடம் அயராது தர்க்கம் புரிபவள் நீ
ஈன்ற தாயினை பெரிதுவக்கச் செய்தவள் நீ
கன்னட மொழிக் கவிதை நீ
கலைமகள் கை கோர்த்த பதுமை நீ
அண்ணனை உயர்வாய் மதிப்பதால் நீ
அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாயோ
இல்லை அறிவுப் பசியினை ஆற்றிக் கொள்ள
சென்னையில் தஞ்சம் புகுந்தாயோ
தொடரட்டும் உன் வெற்றிப் பயணம்
வளரட்டும் நம் உறவு எந்நாளும்
தங்கையே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!