பொருத்தமானவன்

முற்கோபத்தை
முத்தமிட்டே
சமாளிக்க தெரிந்தால்!
குறும்புகளை
சோகத்திலும் ஏற்கும்
பக்குவம் இருந்தால்!
சோகத்தை
வார்த்தைகளால் தேற்றும்
வல்லமை இருந்தால்!
சுதந்திரத்தில்
தலையிடாத
சுயம் கொண்டிருந்தால்!
பாசங்களை
ஒவ்வோர் உறவின்
உருவில் காட்ட
கருணையிருந்தால்!
முத்த ரகசியத்த
பித்த நிலையிலும்
முடிச்சவிழ்க்கா
மூளையிருந்தால்!
காதலுக்காக
கால மழையை
கடலுக்குள்
கலக்க முடிந்தால்!
வாழ்வின் பாகங்களை
தாரைவார்க்க
தயாராயிருந்தால்!
நீ தொலைந்து
அவளே
நீயெனும்
நிலையில்
நீ இருந்தால்!
தூய்மையானவனே!
எனை மறந்த
காதலியை
உனதாக கொள்..
துளையிடாமல்
புல்லாங்குழலில்
இசை யாசித்தவன்
யான்!
தியாகமென
கருதின்_என்
கல்லறையில்
பூக்கள் எறி!