காதல் செய்வது எப்படி
தேவையான பொருள்கள்:
1.ஆணுக்கு, தற்போது காதலன் யாரும் இல்லாத பெண்,
2.பெண்ணுக்கு, தற்போது காதலன் யாரும் இல்லாத ஆண்,
(ரொம்ப கஷ்டம் பட் ட்ரை பண்ணுனா கிடைக்கும் )
3.செல்போன்
4.பேஸ் புக், ட்விட்டர் ல ஒரு அக்கவுண்ட்
5.வாட்ஸ்ஆப்
செய்முறை விளக்கம்
முதலில் காதல் என்னும் நனைந்த விறகு கொண்ட பழைய அடுப்பை பற்ற வைக்க வேண்டும். பின்பு அன்பு ,உண்மை என்ற எண்ணையை ஊற்றி ஆரம்பிக்க வேண்டும்.
அதன் பிறகு போடப்படும் கடலையை பொன் நிறத்தில் வருக்க வேண்டும். கருகினால் காதல் கசந்து விடும்( கவனம் தேவை ).கண்ணில் வெளக்கெண்ணெய் விட்டு பார்க்கவும்.
அப்புறம் காரத்திற்காக கொஞ்சம் ஈகோவை மழைச்சாரல் போல தூவ வேண்டும்.
தேவைக்கேற்ப பொசசிவ்னெஸ் எனும் உப்பையும் சேர்த்து கிண்டி இறக்க வேண்டும் .
அதன் பின் கையிலையோ காலுலையோ ரத்தம் வர மாதிரி வெட்டி அறுத்து டிசைன் பண்ணி பேஸ் புக், ட்விட்டர் ல போஸ்ட் இட வேண்டும். இப்பொழுது யாராலும் பிரிக்க முடியாத பசை போன்ற சுவையான காதல் தயார்.