உம் பொண்ணுப் பேரு பினாமியா
உன்னப் பாத்து பல வருசஙகள் ஆகுது..நல்லாயிருக்கறயா?
அதுக்கொண்ணும் கொற இல்ல. என் வாழ்க்கையே திசை மாறிப் போச்சுடி.
என்னடி சொல்லற?
கல்யாணம் செஞ்சுக்காமலே சில ஆண்டுகள் ஒரு ஆண்பால் நண்பனோட குடும்ப வாழ்க்கை நடத்தினேன் . எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் அவன் என்ன விட்டுப் பிரிஞ்சு எங்கயோ போய்த் தொலஞ்சிட்டாண்டி.
அடப்பாவமே. உனக்கு ஏதாவது உதவி தேவைன்னா சொல்லுடி.
அய்யோ எனக்கு வசதியான வாழ்க்கைக்கு வேண்டிய சொத்து உள்ளது. ஆனா நான் வாழ்ந்த அந்தத் தவறான வாழ்க்கை என்ன தனி மரமாக்கிருச்சிடி.
சரி உம் பொண்ணு எங்க. அவ பேரு என்ன?
எம் பொண்ணு ஒரு மலைப் பிரதேச கானவென்ட் பள்ளிலே படிக்கிறா. அவ பேரு பினாமி.
என்னது உம்பொண்ணுப் பேரு பினாமியா?
எங்கூட சில ஆண்டுகள் வாழ்ந்துட்டு ஓடிப் போன அந்த நாய எம் பொண்ணுக்கு அப்பான்னு சொல்ல வெக்கப்பட்டுத்தாண்டி எம் பொண்ணுக்கு பினாமி- ன்னு பேரு வச்சேன். அந்தப பேர எல்லாரும் 'வெரி நைஸ் நேம்'னு சொல்லறாங்கடி.
ஆமாம் பினாமி ஈஸ் எ ஸ்வீட் நேம்
########
பினாமி என்பது ஒரு பாரசீக மொழிச் சொல். அந்தச் சொல்லுக்கு பெயரில்லாமல் ( வித்தவ்ட் நேம்/வித் நோ நேம்) என்று அர்த்தம்.

