அப்பாவுக்குள் ஒரு இருதயம்

பாவம் பசி மயக்கம் போலும், சுட்டெரிக்கும் வெயில் வேறு நடு ரோட்டில் குப்பர விழுந்து கிடந்தார் ஒரு முதியவர்,

அனைவரும் துளியும் மனசாட்சி இல்லாமல் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று அந்த பெரியவரை பார்த்த படியே கடந்து சென்றனர்,

நான் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தேன், முதியவர் மெதுவாக எழுந்து தண்ணீர் தண்ணீர் என்றார், நான் அவருக்கு தண்ணீர் கொடுத்தேன், அவரின் சட்டையெல்லாம் தண்ணீரில் நனையும் படி மொடக் மொடக் என்று தாகம் தீரும் அளவுக்கு குடித்தார்,

நான் முதியவரிடம் ஐயா தாங்கள் ஏன் இவ்விடத்தில் இப்படி வீழ்ந்து கிடக்கிறீர், தங்களுக்கு சொந்தம் எதுவும் இல்லையா என்று கேட்டேன்,

அதற்கு முதியவர், என் மனைவி இறந்து 2 வருடங்கள் ஆகிறது, எனக்கு இரு பசங்கள் உள்ளனர், நான் ஒரு நாளைக்கு தளராமல் 18 மணி நேரம் வேலை பார்ப்பேன்,

எனது இரு பசங்களையும் தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தேன், எனது சின்ன மகன் பள்ளியுடன் நின்று விட்டான், சிறுவனுக்கு நான் தொழில் கற்றுக் கொடுத்து அவனுக்கு ஒரு தொழிலையும் அமைத்து கொடுத்தேன்,

பெரிய மகனை இரு பட்ட படிப்புகள் படிக்க வைத்தேன், இவர்களுக்காக நான் தூங்காமல் உழைத்தேன், இருவருக்கும் திருமணமும் முடித்து வைத்தேன்,

எனது மனைவி இருந்த வரை என்னை ஒரு நாயாகவாவது மதித்தனர், மனைவி இறந்த பிறகு நான் இருப்பதையே யாரும் கண்டு கொள்ள வில்லை அது மட்டுமல்லாது என்னை ஏதோ ஒரு பிச்சைக்காரனை விட மோசமாக நடத்தினர்

வருத்தம் தாங்க முடியாமல் இறந்து விடலாம் என்று வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன், இப்பொழுது சாகவும் முடியவில்லை, சாகாமல் இருக்கவும் முடியவில்லை, மரண வேதனையை அனுபவித்து கொண்டிருகிறேன், சட்டையில் இருந்த பணமும் தீர்ந்து விட்டது, இப்பொழுது பசியில் இங்கே வீழ்ந்து கிடக்கிறேன் என்றார்,

பிறகு நான் அந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்தேன், உணவு அருந்தி முடித்ததும் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு அவருக்கு ஆறுதல் கூறி விட்டு வீட்டிற்கு கிளம்பினேன்,

நான் வீட்டிற்கு செல்லும் வழியில் என் கண்கள் கலங்கின, நானும் சிறு வயதில் இருந்தே என் தந்தையை ஒரு மனிதனாகவும் கூட நான் மதிக்க வில்லை, என் தாயின் மீது தான் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தேன்,

இப்பொழுது தான் நான் உணர்ந்தேன் தந்தைக்கும் ஒரு இருதயம் உண்டு என்பதை,

நான் என் மனதினுள்ளேயே தந்தையிடம் மண்ணிப்பு கேட்டேன், வீட்டிற்கு சென்றவுடன் நான் முதன் முறையாக எனது தந்தையை அப்பா என்று அழைத்தேன்,,,

எழுதியவர் : விக்னேஷ் (1-Nov-15, 12:41 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 494

மேலே