தொலைந்து போன தோழமை

தொலைந்து போன தோழமை.

தோழிக்கு

அன்பு தோழிக்கு.
அன்பை இழந்த அந்நியன்..
உன்னிடம் நான் பேசி பல மாதங்கள் ஆகிறது,
எப்படி இருக்க?
என்ன பண்ற?
எங்க இருக்க?
அம்மா எப்படி இருக்காங்க?
இந்த வினாக்களுக்கான விடியலை நோக்கி தினமும் விழுந்துவிடுகிறேன்.

நமக்குள் இருக்கர அன்பு என்றும் யாருக்காகவும் மாறது.
அன்பில் உருவான வார்த்தை தவறாகிருக்கலாம் ஆனால் அன்பு என்று மாறாது தோழி,

என் நீ தப்பா நினைச்சிடு இருக்கியான் தெரியல ஆனா நீ என் சரியா புரிஞ்சிவச்சிருக்க..

உன் மேல அன்பு மட்டும் இல்ல அதிகமான மரியாதை இருக்கு.
அதனாலத
நான் இவ்வளவு அமைதியா இருக்கர,
நட்பின் அழகை அறிந்ததும் உங்கிடதா..
எப்படி நடந்துக கூடாதுனு தெரிஞ்சிகிட்டதும் உங்கிடதா..

என் வாழ்வின் புதிய அனுபவங்களை(அவமானம்,வெறுப்பு,அன்பின் அழுகை.,வலியின் வலிமை,வார்த்தைகளின் புதுமை,தனிமையின் தாகம்,காதலின் உச்சநிலை,அன்பை தேடினால் அவமான உண்டு இவ்வாறு பல உண்மைகளை கற்றுக்கொண்டேன்,

இறுதியாக ஒன்றையும் அறிந்து
கொண்டேன்,
பெண்மை இதன் அர்த்தம்)
தந்தது நீ தான் என் காதலே.

உங்கிட்ட பேச கூடாது நினைச்ச ஆனா கடைசியா பேசனும்மு தோனுது அதா,

உன்ன துன்ப படுத்தனும் நான் எப்பவும் நினைச்சது கூட இல்லை ஆன நீ என்ன அப்படி ஏன் பேசனன் தெரியலை.

நீ இறுதிய பேசனதுக்கு பிறகு நான் அமைதி ஆகிட்ட அது பயத்தினால் இல்லை உன் மேல இருக்க மரியாதையினால.ஆன நீ என்ன அவ்வளவு பேசியிருக்க,அவன் பேசனதுக்கு என்ன அப்படி பேசியிருக்க,அத என்னால சிரனிக்க முடியல அவ்வளவு கோவம் அடக்க முடியாத அழுகை .


இறுதிய என் காதலையும் அழுகையும் மறக்க குடிச்சிட..
காதலுக்காக குடிச்சா மறந்துடுவாங்க(நினைவிழந்துடுவாங்க) சொன்னாக ஆன நீ மட்டும்தா நான் நினைவிழந்த நிலையில் என் நினைவில் நின்றாய் அழுகையும் தந்தாய்

அதுலிருந்து தெரிஞ்சிகிட்ட உன்ன மறக்க முடியாது அதனால என்ன நானே மாத்திகளாம் இருக்க.

இறுதியாக
நான் உன்னுடன் பழகியதது நண்பனாக தான் இதை எப்படி நிருபிப்பது என்பது தெரியவில்லை.
அதற்க்கான வாய்ப்பையும் நீ எனக்கு தரவில்லை.நான்
செய்த ஒரே தவறு என் காதலை உன்னிடம் முதல் நாளே சொன்னது.
(நான் உன்னிடம் என் காதலை மறைத்து உன்னிடம் நண்பனாக பழகிருந்தால் என்ன நிகழ்ந்து இருக்கும்?,.
பதில் உனக்கு தெரியும்)

மற்றோரு வினா உன்னிடம்.,
நண்பர்களிடைய காதல் வருவது குற்றமா அப்படியானால் அந்த குற்றத்திற்கான காரணம் என்ன?
தன்னை பற்றி முழுமையாக அறிந்த ஒருவர் தன் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று நினைப்பது தவறா?

என்னை வெறுப்பதற்கான காரணத்தை சொல் உன்னிடம் அன்பை கேட்டதனால?
இல்லை
உன் எதிர்காலத்துக்கு எதேனும் அளவிடு, தகுதியை வைத்துள்ளாய அதற்கு நான் தகுதியில்லாதவன் என்று நினைக்கிறாய?

உன்னை பற்றி எல்லாம் சொன்ன நீ இதையும் தோழியாகவே சொல்லியிருந்தால் நான் என் காதலை விதைத்த உடனே எடுத்தெறிந்துருப்பேன் ஆனால் உன் மௌன ஊற்றில் இன்றி விருச்சமாய் வளர்ந்துவிட்டது என் காதல்.

தொலைத்துவிட்டேன் தோழியே தோழமையைய்.

எழுதியவர் : குருசாமி (1-Nov-15, 9:59 am)
சேர்த்தது : குருசாமி பழனி
பார்வை : 178

மேலே