மகன்
அழகிய தமிழ் மகன் ஒருவன்
சிங்காரச் செல்ல மகன் இன்னொருவன்
இவர்களை நான் பெற்றெடுக்க என்ன தவம் செய்தேனோ
கண்ணா எனக்கு ஒரு குவளை பால் வேணுமடா என்றதுமே
ஓடோடிச் சென்றெனக்கு பால் காய்ச்சி கொணர்ந்திடுவான்
தினமும் அம்மாவுக்கு வேலைகளில்உதவிடுவான்
வயதான பாட்டியம்மா சொல்கின்ற வேலையெல்லாம்
மகிழ்ச்சியுடனே செய்திடுவான்
படிப்பதில் படுசுட்டி ஒருவன்
சதுரங்க விளையாட்டில் சாதித்தேகாட்டிடுவான் இன்னொருவன்
பாசம் என்பதை இவர்களால் உணர்ந்து கொண்டேன்
வாழ்க பல்லாண்டு என் இனிய செல்வங்களே
என்றும் பெண்களை மதித்திடுங்கள் மலர்களே