தாயுள்ளம் என்றும் வாழ்க ___ எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தாயன்பைக் கண்டதுமே தாவி யோடித்
---- தன்னிலைதான் ஈர்த்ததடி என்றன் தோழி .
மாயங்கள் செய்திடுவாள் மாதா நாளும்
----- மனமிரங்கிப் பேசிடுவாள் கேட்போம் நாமும் .
காயங்கள் மாற்றியுமே காத்து நின்றுக்
----- கருணைமழை பொழிகின்ற தாயி னுள்ளம்
சேயான என்றனையும் சேர்த்து வாழ்வில்
----- செல்வங்கள் தந்திடுவாள் என்றும் வாழ்க !


வாய்பாடு :-

( காய் காய் மா தேமா
காய் காய் மா தேமா )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Nov-15, 9:34 am)
பார்வை : 158

மேலே