வைர நெஞ்சம்

உருத்தெரியாக் கருவை நேசிக்கும்
கருணைக் கடவுள் ஆனபோதும்..
படைத்தல் காத்தல் அழித்தலெனும்
முத்தொழில் மூன்றாமதைத் துறந்து..
அன்பென்ற வார்த்தையிலே அகிலம்படைத்து
'அம்மா' யென்றதும் அருகேநின்று
வருந்தும் பிள்ளைமன வாட்டம்குறைக்க
வருந்தும் உன்னிடமே வைரநெஞ்சம்
அன்பால் அனுதினமும் ஒளிவீசட்டும்..
அகிலமே சிறப்பாக அதைப்பேசட்டும்
$ மூர்த்தி

எழுதியவர் : (2-Nov-15, 2:23 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : vaira nenjam
பார்வை : 157

மேலே