திருமணத்திற்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும்

*காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி
ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை
எனக்குத் தேவையானதைச் செய்ய
பம்பரமாய் சுழல்வாள்.

* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு
சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,
என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!

*பசிக்கிறது என்று நான் சொன்னதும்
என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால்,
இன்னும் சமையல் தயாராகவில்லை
என்று அர்த்தம்..!!

*சமைத்ததை கையில் கொடுத்து
ருசி பார்க்கச் சொல்லியிருந்தால்
உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?

*தோட்டத்தில் நீ நின்றிருந்த போது
உன்னை உரசிச் சென்ற வண்டு,
மற்றொரு வண்டிடம் கேட்டது....
வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !

* மழைக்காக அவளும்
இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..
அவள் என்னைத் தழுவிக்கொள்ள
இன்னும் சில விநாடிகளே உள்ளது.!

*என் போர்வையைத் துவைக்கும்போது
மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும்
அப்படித்தான் என்கிறாள் !

*உன் குரல் கேட்காத நாட்களில்,
நான் கேட்ட எதுவும்
என் நினைவில் இருப்பதில்லை ..!

*என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே...

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (1-Nov-15, 8:15 pm)
பார்வை : 436

மேலே