நொடி முள்ளும் மணி முள்ளானது-ஆன்ஸ்ராஜ்

தொண்ணூற்றைந்து நாட்களாக பரீட்சயமான
மாநகரத்துச் சாலை - இன்று ஏனோ
திரிந்து தெரிகிறது என் கண்களுக்கு...

மணிமுள் நொடிமுள் என ஓடும் நாள்போய்,
நோடிமுள்ளும் மணி முள்ளானது இன்று!

கண்களிரண்டும் தெப்பமாக - மறதியில்
மலைக்கோட்டைவாயிலில் இறங்க எத்தனித்து
பின்சத்திரம் தாண்டி , அண்ணாசிலையில் இறங்கி நடக்கிறேன் - நான் மட்டும் தனியாக ,
பரபரப்பான சாலையில்!

விடுதிவரை வந்து விடைகொடுக்க
அண்ணன் இல்லை இன்று...
அலாதிப்பிரியம் அவன் மீது!
அதனால்தானோ என்னவோ,
சாலை முதல் சகலமும் மாறிப்போனது
இம்மூன்று நாட்களில்!!

எழுதியவர் : பபியோலா (4-Nov-15, 10:34 am)
சேர்த்தது : பபியோலா ஆன்ஸ்.சே
பார்வை : 117

மேலே