பதில் காலம்

திரும்பவும் ஒரு முறை
படித்துப் பார்த்து...
எழுத்துப் பிழைகள் சரிசெய்து...
சொல்ல வந்த செய்திகள்
விட்டுப் போகாமல்
சுருக்கமாகவும் விளக்கமாகவும்
நிறைவு பெரும் வாக்கியமாக்கி...
இப்படிக்கு அன்புடன்
என்றே கையெழுத்திட்டு
விருப்ப தெய்வத்தைத்
துணைக்கழைத்து...
நான்காக மடித்து
நாவெச்சில் தடவி
ஒரு பக்கம் ஒட்டிக் கூடாக்கி
முன்னம் பெறுனர்
பின்னே அனுப்புனர்
முகவரி தெளிவாய்
தபால் காரருக்கு ஏதுவாய்...
மாலை நான்கு முப்பது கட்டுக்குப்
பெட்டியில் சேர்த்துப்
பதில் வருகைக்காய் நாள் எண்ணிக்
காத்திருக்கும்....

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (4-Nov-15, 12:17 pm)
Tanglish : pathil kaalam
பார்வை : 125

மேலே