வாழ்க்கை

இருள் நிறைந்ததும்
நீண்டு தொடர்வதுமான
குகைரயில் பயணமாய்
வாழ்க்கை

நிறுத்தங்களும்
சந்திப்புக்களுமாய்
நீள்கிறது

நானோ
மது வாடையும்
மானுடர்களின்
ஓங்காரச் சிரிப்பொலிகளும்

எட்டாத தனியிடத்தில்
இருந்தபடி
யோசித்துக் கொண்டிருக்கிறேன்

எதுவென்
நிறுத்தமென்று

எழுதியவர் : (4-Nov-15, 2:35 pm)
பார்வை : 232

மேலே