அன்பிலே கரைந்தேன்
சாபமென பருப்புவிலை யேறிப் போக
***சாம்பாரை மறந்திடத்தான் வேண்டு மென்றாள் !
கோபமுடன் தட்டோடு தூக்கி வீச
***கூப்பாடு போட்டவளும் திட்டித் தீர்த்தாள் !
தீபமென ஒளிவீசும் வாழ்வில் சண்டை
***தீராதோ எந்நாளும் தட்டுப் பாட்டால் !
தாபமுடன் அணைத்திடவே குளிர்ந்தாள் மெல்ல
***தாரத்தின் அன்பினிலே கரைந்தேன் நானே !
( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
காய் காய் மா தேமா
காய் காய் மா தேமா