மனம் மாறிய மானிடன்
மனம் மாறிய மானிடன்
அன்று மாலை 6.30மணி இருக்கும்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் மக்கள் கூட்டம் வேக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்
கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில் வண்டி வந்து நின்றது
ஒரு பெரிய சுனாமி அலை வருவது போல ரயிலில் இருந்து மக்கள் மேலே செல்லும் படிக்கட்டுகளில் ஏறி கொண்டிருந்தனர்
கீழே பிளாட் பாரமில் கண்ணு தெரியாத ஒரு சிலர் கடலை மிட்டாய் குவியலை கையில் வைத்து கொண்டு சுவையான பர்பி சார் ஒன்னு 5 ரெண்டு 10 நு கூவி கொண்டு கையில் இருக்கும் கை தடி ஒன்றை தரையில் தட்டி
கொண்டு சென்று கொண்டே
தாம்பரம் செல்லும் ரயில் வண்டிக்காக காத்து கொண்டு இருந்தனர்
அருகில் உள்ள லயோலா கல்லூரி மாணவர்கள் கல்லூரி முடித்து விட்டு ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
வேலை முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல ஒரு கூட்டம் வரும் வண்ணம் இருந்தது
.அதே இடத்தில் இளம் பெண்கள் ஒரு ஒரு சிலர் காதில் காதில் பாட்டு கேக்கும் கருவி மாட்டிகொண்டு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
பிளாட் பாரத்தில் இருக்கும் அமர்வு இருக்கையில் ஒரு காதல் ஜோடி உக்காந்து கொண்டு வெட்டி கதை பேசி கொண்டு இருந்தனர்
அப்போது அங்கே நடக்க சக்தி இல்லாமல் ஒரு 70 வயது உள்ள பாட்டி சாப்பிட்டு 3 நாள் ஆகுது கண்ணு எதாச்சும் இருந்த கொடு ராசா னு அங்க இருக்கவங்க எல்லாருகிட்டயும் கேட்டு கொண்டு இருந்தாள்
அங்கே ஒரு 25 வயசு இருக்கும் ஒருவர் நின்று கொண்டு இருந்தார் பார்க்க படு ஹன்ட்சம் அடிடாஸ் ஷு போட்டு கொண்டு ஸ்டைலிஷ் ஆன பிலாக் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஒயிட் ஷர்ட் போட்டு ரேபான் கண்ணாடி அணிந்து கொண்டு நின்று நின்று கொண்டு இருந்தார்
எல்லாரிடமும் கேட்டு கொண்டு இருந்த அந்த பாட்டி எவரும் உதவி செய்யாததால் அடுத்து
அவனிடம் வந்து நின்று ராசா சாப்டு ரொம்ப நாள் ஆகுது எதாச்சும் இருந்தா கொடுப்பா நு கேட்ட அந்த பாட்டிய பாகவே பாவமா இருந்துச்சு அவனோ அவள் கேட்டு கொண்டு இருக்கும் பொது மௌனமாக நின்று கொண்டு இருந்தான்
அவன் தினமும் அந்த வழியாக தான் செல்வான் செல்லும் போதெல்லாம் அந்த கிழவி அங்கே பசியோடு படுத்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு தான் செல்வான்
பிறகு ரயில் வந்ததும் ஏறி சென்று தி நகர் சென்று அங்கே அவன் நண்பர்களை சந்தித்தான்
அவன் நண்பர்களில் ஒருவன் டேய் இன்னைக்கு உனக்கு பர்த் டே இன்னைக்கு புல் ட்ரீட் நீ தான் என்று சொன்னான்
சரி மச்சி நு சொல்லி அங்கே இருக்கும் பெரிய ஹோட்டல் சென்று அவன் நண்பர்களுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தான்,
அவர்களோ அனைவரும் நல்ல வசதியான குடும்பத்தை சேர்த்தவர்கள் இவனும் அப்படி தான் அவர்கள் பிட்சா பர்கர் சிக்கன் தந்துரி பிரியாணி இன்னும் பல விதமான உணவு வகைகளை ஆர்டர் பண்ணி பாதி சாப்டு விட்டு மீதி தட்டிலே வைத்து விட்டு 100 ருபாய் டிப்ஸ் வச்சிட்டு வந்தனர்
வரும் போது அவன் அந்த உணவுகளை பார்த்தன் அந்த வயது முதிர்ந்த கிழவி அவனிடம் பிச்சை கேட்டது திடிரென ஞாபகத்தில் வந்தது
அந்த மூதாட்டி கேட்டு ஒன்றும் தராமல் இங்கே இவ்வளவு பொருட்களை வீணா ஆக்கி விட்டு இருகின்றோமே னு அவனுக்கு இரவு முழுவது இந்த எண்ணமே மனதில் வந்து வந்து ஞாபக படுத்தியது
அப்போது தான் முடிவு எடுத்தான் இனிமேல் அந்த மூதாட்டிக்கு எதாச்சும் தினமும் வாங்கி கொடுக்கனும்
நம்ம கிட்ட இருக்கறதால இப்படிலாம் வீனா செலவு பண்றோம் நம்மகிட்டயும் காசு இல்லாத நிலைமை நாமலும் பசியில தான் இருக்கனும் நு நினைச்சி காலை வேலைக்கு செல்ல கெளம்பி ரயில் நிலையம் வந்தான்
அங்கே அந்த பாட்டி இருக்கும் இடத்தில் வந்து பார்த்தான் அங்கு பாட்டி காணவில்லை
சரி மாலை வந்து பார்த்துக்கலாம்னு படிக்கட்டு ஏறினான் இறங்கும் வழியில் ஒரு சில பேர் சின்ன கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர்
அவன் கேழே இறங்கி வந்து எட்டி பார்த்தன்
அங்கே நேற்று அவனிடம் ரொம்ப பசிக்குது ராசா எதாச்சும் இருந்தா கொடு பா னு கேட்ட கிழவி முகத்தில் ஈக்கள் மொய்க்க உடம்பு மெலிந்து இறந்து கிடந்தாள்
அவன் மனதுக்குள் குற்ற உணர்ச்சி , அலை அலையாய் பெருக்கெடுத்தது. மனதுக்குள்ளே நினைத்து கொண்டான்
நேற்று எதாச்சும் உதவி செய்து இருந்தால் பாவம் அந்த பாட்டி பிழைத்திருக்கும் அன்றையிலிருந்து தினமும் ஏதாவது ஒருவருக்கும் உணவு வாங்கி கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டான்
கா.தணிகைவேல்
முதுகலை ஊடக கலைகள் துறை
லயோலா கல்லூரி சென்னை