சதுரங்கத்தின் ஓர் பொம்மை - ஆனந்தி
சிறை பட்டு
விட்டேன் - மீண்டிட
முடியவில்லை
மீட்டிட
யாருமில்லை....
ஆடுகளத்தின்
பொம்மை தான்
இருந்தும்
வலிக்காமல் இல்லை....
தொட்டு தொட்டு
இடம் மாற்றியதில்
துவண்டு தான்
போவேன்....
கீழே தள்ளிடுகையில்
சரிந்து வீழுவேன்
மனம் முழுக்க
வலியோடு....
பார்ப்பவர்கள்
கவனமாய் பார்க்கையிலே
எப்படியோ
நடந்து விடுகிறது
விபத்து
எனக்கு மட்டும்....
வெற்றி தோல்வி
இடம் மாறத் தான்
செய்யும் இங்கே....
வெற்றியின்
ஆர்பரிப்பில் இல்லை
தோல்வி கண்ட
எசமானனின்
தோள் தட்டி
நிற்கிறேன் - என்னை
புரிந்திடுமா?
ஓர் நாள்
யாருக்காவது.....