தப்பு தவறு குற்றம்

தனிமனித ஒழுக்கம் தான் முன்மாதிரி,
மாதிரிகள் முறையானால் மன்பதை செழிக்கும்
இல்லையேல் மாசு கவ்வும் சூழல் கெடும் கேடு விளையும்
தப்பு தவறாகும் தவறு குற்றமாகும் குற்றம் பாவமாகும்
பாவம் தப்பால் என்றால் கண்ணகி கதை தான்
தவறால் என்றால் ஹீரோஷிமா கதை தான்,
குற்றம் ஆனால் செப்டம்பர் 11 கதை தான்..

ஒருவர் அறிந்தே ஒவ்வாது செய்யும்
ஒவ்வொன்றும் தப்பு தான்,
அது நல்லது கெட்டது என்பதை யாருமறியா
திருக்கும்வரை அவர் உயர்வார் அல்லது விழுவார்..

அந்த தப்பை மற்றவர் அறிகையில்
அக்கறை கொண்டே ஆகாது என்றே
அறிவுறுத்துகையில் சினத்துடன் சீறுவார்
லட்சுமன்ரேகா கோடுகொண்டு அடக்கினால்
அடங்குவார் இல்லையேல் அழிவார்...

தப்பு அடுத்தவர் தெரியவரும்போது தவறாகும்
அதிகாரத்தில் உள்ளவர் உணர்கையில் குற்றமாகும்
உப்பைதின்பவர் தண்ணீர் குடிக்கவேண்டுவது அதிகாரம்
உடனுக்குடனா என்பதை தீர்மானிப்பது காலகட்டம்...

கொள்ளைக்காரர்களின் நாட்டில் திருடர்கள்தான்
அதிகபட்ச யோக்கியவான்கள்.
கோவணம் கட்டாதவர்கள் சொல்லலில்
கோவணம் குற்றமெனப்படும்..

முறைப்படுத்தப்பட்ட காமமும் காதலும்
இலக்கணம் மீறாத இலக்கியம், எடுத்துக்காட்டாகும்
தறிகெட்டு ஓடும் தர்க்கம் தேடும் அத்துமீறல்கள்
எல்லாம் அலங்கோலம் அவமானம் அழிவின் உச்சம்..

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் வாயால் மட்டுமே அல்ல,
செயல் இலாது நடக்கும் எல்லாம் நாடகம், கல்லெறிக்கு தப்பாது
மோடி எம்.ஜி ஆர் போல வந்தார் வென்றார் காத்திருக்கிறோம்
நல்லது கெட்டது தெரிந்து விடும் நாடகம் எத்தனை நாள்தான் நீடிக்கும்?

எத்தனையோ முன்மாதிரிகள் எல்லோரும் பார்த்தாகியும்
இன்னும் இங்கே வழிநடத்த கத்தி மேல் நடக்க யார் விழைவார்
1% சுத்தம் குறைவு, அசுத்தமானால் வாய் கிழிய பேசலாம்
வழி நடத்த யார் வருவார், போதனை அல்ல சாதனையே தேவை இங்கு.
மோடியோ மன்மோகனோ வருகை இங்கே போதிக்க அல்ல சாதிக்க!

எழுதியவர் : செல்வமணி (5-Nov-15, 9:50 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 329

மேலே