கருப்பு மலர்கள்

சின்ன பூக்களை
சில்லரைகளுக்காக
மடலொடித்து பொட்டுவிட்டனர்
அவர்களின் கனவை
காற்றில் விட்டனர்..

பிஞ்சுப்பிரபஞ்சங்கள்
அறிவுக்கோவிலில்
அடைக்கலம் பெறாமல்
தெநீர் வளாகத்தில்
பென்ச் துடைக்கும் பணியில்....

வெடிவைக்கப்போகும் போது
வெடுக்கென உதரும் கரங்களில்
வெடிமருந்து கொடுத்து
பட்டாசு படைக்கச்சொல்கின்றனர்...

சோலையில் வாழவேண்டிய
அழகு மலர்கள்
சாலையோரம் கல்லுடைக்கும் பணியில்...

சிரிப்பை தொலைத்த இந்த
சின்ன மேகங்கள்
கண்ணீர் வடிக்கின்றன...

இந்த கருப்பு மலர்களின்
கண்ணீரை துடைக்க கைகுட்டை வேண்டாம்

கைகொடுத்து வாழ்வில்
கரைசேர்த்து
கையசைத்து
அனுப்பி வையுங்கள்
இந்த கருப்பு மலர்களை
பள்ளிகளுக்கு.....

எழுதியவர் : சந்தோஷ் (5-Nov-15, 11:42 am)
Tanglish : karuppu malarkal
பார்வை : 1745

மேலே