ஒரு சிசு சாம்பலாகிறது

காதலின் திரை
கிழித்த காமம் வழியே
என்னுயிர் உன்னில்
ஊற்றி
பயிர் செய்த உயிர்
கருவாகி உருவாகி
வெளியேரும் சிசு
பெண்ணாக பிறந்தாயிற்று...

பெண்பிள்ளை என்றதும்
இருவர் முகத்திலும்
சோகம்...
பெருசுகளிடம்
பேச்சும் வாங்கி
பிறந்த குழந்தைக்கு
தன் மார்பணைத்து
தாய்பால் கொடுக்கவேண்டிய
கணத்தில்
கள்ளிப்பால் சங்குடன் தாய்...

சாதனை படைக்க பிறந்த
பெண்ணை தீக்கிறையாக்கிவிட்டு
அடுத்து குழந்தைக்கு
தயாராகி விட்டது
அறிவிழந்த கூட்டம்....

எழுதியவர் : சந்தோஷ் (5-Nov-15, 11:48 am)
பார்வை : 153

மேலே