ஆசைகள் !!
கண்ணோடு கண் பேசி
கடிதம் கொடுத்தேன்
என்னவளே எழுதியது எழுத்துக்களல்ல
என் வாழ்க்கை பாகத்தின் உதிரிகள்!!
பதில் இங்கு தெரியாமல்
பார்வையால் கொன்று
என்னை பள்ளத்தில் தள்ளாதே!
பெண்ணே! உன் உள்ளத்தில் தள்ளு!!
உனக்குள்ளும் ஆசைகள்
தெரிவிக்க பல யோசனைகள்
என் வாழ்வில் வசந்தம் இனி வீசவில்லை
காரணம் பெண்ணே! நீ பேசவில்லை!!!