வழிநெடுக விதைத்து விட்டேன்

விழியொழுகும் ஓர் இரவுக்கான காத்திருப்பு எனக்கும் என் கவிதைக்கும் உண்டு

பரிமாண சுவர்களின் வழியே கவிதை
வரிமாறி வருகின்றன
அரங்கேற்றம் அடுத்த கட்டம் தான்
என்னால் எழுதப்படுபவை என்னாலேயே தூவப்படுகின்றன

என் கவிதை வீதிகளுக்கென தனியொரு தேசம் தேவையில்லை

சூரியனுக்கும் சந்திரனுக்கும்
இடையிலொரு மின்னல் கீற்று
என் வரிவழியே ஓடிச் செல்கின்றன

ஒவ்வொரு கவிஞனுக்கும் அவனது விரல் பிடிக்கும் எழுத்தானி தான் அவன் சிந்தனையை தெளிக்கும்
ஏர் கலப்பை

எழுதியவர் : கவிஞன் நவீன் (5-Nov-15, 7:46 pm)
சேர்த்தது : கவிஞன் நவீன்
பார்வை : 61

மேலே