நீ இல்லா வாழ்வெனக்கு,,,,,,,,,,

என் மனம்கவர்ந்த என்னவனே
தாய்மாமன் உறவினிலே உன் மடியில் தவழ்ந்துவந்தேன்
விவரம் தெரிந்த நாள் முதலாய் உன் நெஞ்சம் தான் மெத்தையடா நான் உறங்க
மெட்டுவிடும் வயதினிலும் உன் நெஞ்சம் தான் என் சொர்க்கமடா
வயதின்றி உன்னை என்னுள் நுழைத்துவிட்ட பேதையடா
ஆனாலும் என் காதல் புரியலைடா
உன் கல்யாண ஏற்பாடிலே கலங்கிவிட்டேன் காதலனே
கத்தி கதறுகிறேன் கெஞ்சி நான் அழைத்திடினும்
கல்லேதான் உன் மனமே கரையலையே
வயதை நீ சொல்லிவைச்சி காதலை நீ உதறிவிட்டாய்
பேதையவள் காத்திருக்கேன் காத்திருக்க உனக்கு நேரமில்லை
சுற்றத்தில் கதறிடினும் கரம் கொடுக்க யாருமில்லை
என் கண்ணீரின் அணைகளடா
கல்யாண நாள் நெருங்க நாராகி போறேனடா
உச்சிவிட்டு சாமி நெஞ்சில் குடியேற நினைச்சிட்டாலும்
உன்னைவிட்டு போக மனமில்லைடா
நான் உள்ளத்தில் வாழ்ந்திடறேன்
நீ உடலோடு வாழ்ந்திடடா
உன் சந்தோச வாழ்க்கையிலே என் மனசோர வாழ்த்துகளாம்
என் காதல் ஒரு சரித்திரமாம்
காலங்கள் உருண்டாலும் என் காதல் மாறாது
பருவம் வந்த நேரம் பார்த்து நீயும்
வந்தாய் காஞ்சிபுர பட்டெடுத்து
என் மாமன் முகம் காணயிலே பூலோகம் காணலியே
பட்டெடுத்த உன்னிடமே மஞ்சத்திலே நினைவுமடா
ஐயோ இன்னுமொரு மரணஅடி உன்னிடத்தில் வாங்குகின்றேன்
ஒருத்தனை காட்டிநீயும் என்னோட கணவர் என்றாய்.
மனசுக்குள் கதறுகிறேன்
நீ தான்டா என் கணவர் வேறுயாரும் இல்லையடா
நீயும் தான் கேக்கலையே என் மனசை நீ பாக்கலையே
உன்னோட தீவிரம் பார்த்தே
கண்காண இடத்தை தேடி உன் நினைவையும் சுமந்துக்கொண்டு தலைமறைவு வாழ்கைதானே
தாய் முகம் காணா கன்று போல
உன் முகம் பார்க்க பர்தா என்ற முகமூடிகள்
என் முமூடியில் தெரிந்துக்கொண்டேன்
உன் அப்பன் வைச்ச சொத்துக்குதான்
உறவுகளின் நாடகங்கள்
உன் மனைவியோட பொய் வேசங்கள்
உன்னை கொலைவெறியா தாக்குகையில்
பொங்கிவிட்டேன் பூ மகள் தான்
பூ மகளே புயலாகி போனேனடா
கொலைவெறியா பாய்ந்துவிட்டேன்
குள்ளநரி கூட்டத்துக்குள்்
உன் மரண ஓலம் என்னை கொதிக்கவைத்து
என் உயிரான உன் மேல்வைச்ச கரங்களையும் துண்டுமாக்கி
என் பாத்து திகைச்சிட்டியா என் குழந்தையடா நீ எனக்கு
போறேனடா சிறையினிலே சிறைபறவை கூண்டுக்குள்ளே
என் கூண்டில் நீ இருப்பாய்
காலம்வரை காத்திருடா
கனியும்வரை வந்திடுவேன்
கூண்டைவிட்டு திரும்புகையில் திகைக்கவைச்சாய் என்னை நீயே
வாரி அணைத்து முத்தமிட்டு
பக்கத்திலே இந்த டைரி என் காதலைதான் சொல்லிடுச்சா
இப்போதான் புரிஞ்சிடுச்சா
என் உயிரான உயிரடா நீ
நீ இல்லா வாழ்வெனக்கு
உயிரில்லா தேகமடா

எழுதியவர் : செல்வம் சௌம்யா (6-Nov-15, 1:20 pm)
பார்வை : 319

மேலே