ஏழையின் இரங்கலை யார் கேளீர்- முஹம்மத் ஸர்பான்

இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர்!
பேசுகிறேன்,உந்தேன்
ஏழைத் தோழன் பேசுகிறேன்,
என் இரங்கலை கேளுங்கள்
கருணை நெஞ்சங்களே!

என் ஓட்டக்குடிசைக்குள்ள
உடைஞ்ச சட்டியிருக்கு, புழுங்க
வைக்கே ஒரு பிடி அரிசில்லேயே!
என் ஆத்தா இறந்து விட்டா?
அவ இருந்தா உதிரத்தை என்
பசிக்கு சோறாக தந்திருப்பாலே?
அப்பா விட்டு போய்விட்டார் இந்த
நாதி கேட்டவனுக்கு யாருமில்லே மண்ணிலில்....

என்டே தோளு வரண்டு போச்சு
பூக்களே பறித்து தேன் அருந்தி பசி
தீர்க்க நெனப்பேன். ஆனா அந்த
அமுதத்தை தேனீ உறிஞ்சிக் கொண்டிருக்கும்.
அது குடித்தே மீதத்தே நான் குடித்தா
பூவின் மகரந்த மணிக்கு பசிக்குமல்லவா?

பாதே நடப்பேன் சீமாட்டி வீட்டுக்கு
யாசிக்க, அவ மனையாள் காக்கை
விரட்ட உண்ணும் கைவிரல் எடுக்க
கஞ்சப்பட்டு இடக்கை எடுப்பவள்
இந்த ஏழையின் பசிக்கு பிச்சே தருவாளா?

இந்த மண்ணிலே நான் நெருப்புலே
வாழுறேன். கடவுள் பாசக்காரன் தான்
எனக்கு இந்தவுலகே நரகமாக்கி நிலையான
வாழ்வே சுவனமாக்கி தரப்போறானா?
கல்லற நெருக்காமே என்னே காக்கப்போறானா?
இன்னும் ஓரிரு நாளுலே விடை தெரியும்,
இந்த இறக்கப் போகும் ஏழைக்கு......,

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (6-Nov-15, 1:19 pm)
பார்வை : 129

மேலே