அம்மா

ஒரே வார்த்தையில் அன்பொழுக எழதபட்ட காவியம்
அம்மா..
உயிர் தந்தவளுக்கு
உயிர் எழுத்தின்
முதல் எழுத்து
அம்மா..

நாம் பிறக்கும்
முன்பே நமக்காக
தவம் இருந்தவள்
அம்மா..

நாம் உள் இருந்து உதைத்தாலும்
பூ விழுந்தது போல
மகிழ்ந்தவள்
அம்மா..

நாம் வரும் போதே வலி கொடுத்தாலும்
நம்மை பார்த்து
அழுது கொண்டே
சிரித்தவள்
அம்மா..

தன் உயிரை பாதியாய்
நமக்கு தந்தவள்
அம்மா..

நாம் தூங்கா இரவெல்லாம்
சிவராத்திரி தான் அவளுக்கு

நாம் தூங்கிய
பிறகும்
தூங்காமல் விழித்து
இருப்பாள் நாம்
தூங்கும் அழகை
பார்த்து..

முதன் முதலாய்
உயிர் திரட்டி அம்மா என்று நா சொல்ல
அவள் கண்ட மகிழ்ச்சியை அவள் விழியோர கண்ணீர் சொல்லியது..

இரத்தத்தை வெள்ளையாக்கி பாலுட்டியவள்
அம்மா..
நாம் நடை பழக
அவள் முட்டியிட்டாள்,
நமக்கு அடிபடும் போதெல்லாம்
வலியால் துடித்தவள்
அம்மா..

நம் ஒவ்வொன்றையும்
படம் பிடித்து இதய அலமாரியில் பத்திரமாய் வைத்திருப்பதும்
அவள் தான்..

மடி மெத்தை தந்தவள் அம்மா..

தான் கஷ்டப்பட்டாலும்
நாம் கஷ்டப்படக்கூடாது
வலித்தாலும் யாருக்கும் தெரியாமலே
அழுபவள் அம்மா..

செங்கல் சுமப்பாள்,
கல் உடைப்பாள்,
எச்சில் பாத்திரம் கழுவுவாள்..
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்
அவள் சொல்லாத
கஷ்டங்களை..

தன் குழந்தை
வளர்ந்து இருப்பார்கள்
அவள் இன்னும்
அம்மாவகவே
இருப்பாள்...

இதுவரை செருப்பு போட்டு இருக்க மாட்டாள்
தன் பிள்ளைக்காக
புதிதாய் வாங்கிய
செருப்பை
கையில் தூக்கி வருவாள்
அப்போதும்
செருப்பு இடமலே..

எழுத, படிக்கத் தெரியாது பெருமையாக சொல்லிக் கொள்வாள்

ஏன் புள்ள காலேஜூ படிக்குது.

தன் பிள்ளையை ஊரே திட்டினாலும்
ஊரை மட்டுமே திட்டுபவள் அம்மா..

எதேதோ எதிர்பார்த்து சொந்தங்கள் வரும்
அன்பை மட்டுமே தர தெரிந்த ஒரே சொந்தம்
அம்மா அவள் மட்டுமே..

அம்மா, அன்பு இரண்டும் மூன்றெழுத்தே..

எங்களுடன் கூடவே இருக்கும் தெய்வமே,
தேவலோகத்தில் இருந்து வழி தவறி
வந்த தேவதையே..

நாங்கள் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ
எங்களுக்கு நீங்கள்
அம்மவாய் கிடைத்தற்க்கு..

இனியொரு ஜென்மம் இருக்குமானால்
நீங்கள் எங்களுக்கு
குழந்தையாக வேண்டும்..
நீங்கள் காட்டிய
அன்பை முழுவதுமாய் காட்டா விடினும்

அம்மா ஒருமுறையேனும்
உங்களை மடி
சுமக்க வேண்டும்

உங்களை பெற
பிரசவ வலி பொருக்க வேண்டும்...

_அம்மாக்களுக்காக_



..மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : நாகராஜன் (6-Nov-15, 6:30 pm)
Tanglish : amma
பார்வை : 464

மேலே