அஞ்சி ஓடும் பட்டாசு வீரர்கள்

காற்றின் தூய்மையைக் கெடுப்பதே என்றாலும்
முதியோரும் பிஞ்சுக் குழந்தைகளும்
பிணியாளரும் பிற உயிரினங்களும்
அஞ்சி நடுங்குவரே என்றாலும்
இரக்கமின்றி
காசைக் கரியாக்க இதயம் நடுங்கும் இடியோசை எழுப்ப
வெடிகளின் திரிகளில் தீயைக் காட்டிவிட்டு
பறமுதுகிட்டுத் தலைதெரிக்க அஞ்சி ஓடும் வெடிவிரும்பி வீரர்கள் நாங்கள்

எழுதியவர் : மலர் (7-Nov-15, 1:04 am)
பார்வை : 53

மேலே