இட்லியும் சட்னியும் --- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இட்லியுடன் தொட்டுக்கச் சட்னி உண்டே .
----- இன்பமாகச் சாப்பிடலாம் வாரீ ரிங்கே .
பட்டினியைப் போக்கிடுமே ஏழை மக்கள்
----- பசித்துன்பம் நீக்கிடவே இட்லி சட்னி .
வட்டநிலா இட்லியையும் வகையா யுண்ண
----- வந்திடுவர் விருந்தினரே அழைப்போம் நாளும்
வட்டமாக அமர்ந்திடுவோ மில்லந் தன்னில்
------ வரிசையாகச் சுவைத்திடுவோம் வாரீர் வாரீர் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (7-Nov-15, 8:57 pm)
பார்வை : 49

மேலே