தலை தீபாவளி
![](https://eluthu.com/images/loading.gif)
என் பாதங்கள் சத்தமின்றி நடக்கும் பொழுது
கொலுசு மட்டும் இப்படி கூச்சல் போடுவது ஏன் தோழி
காதல் கணவனின் கண்களை நோக்கும் பொழுது
இமைகள் மட்டும் இப்படி ஆர்பாட்டம் செய்வது ஏன் தோழி
கற்பனைக்கு அவன் விரல்கள் தீண்டும் பொழுது
நகக்கீறல்கள் என்மேல் கோலம் போடுவது ஏன் தோழி
மூச்சு காற்றையும் அடக்கி அவனருகில் அமரும் பொழுது
ஊசி வெடிச்சத்தம் எங்களை ஏளனம் செய்வது ஏன் தோழி