தீபங்களின் பண்டிகை
![](https://eluthu.com/images/loading.gif)
மக்களின் முகங்களில் புன்னகை பூக்கள் பரவட்டும்
மத்தாப்பு பொறிகள் ஜெகமெங்கும் ஜொலிக்கட்டும்
ருசிகளின் ராஜாங்கம் இல்லம்தோரும் நடக்கட்டும்
நட்சத்திரங்களுடன் அகல் விளக்குகள் போட்டியிடட்டும்
பட்டாசு வெடிச்சத்தத்தில் விழாக்கோலம் பரவட்டும்
பட்டி மண்டபத்தில் சிரிப்புடன் சேர்ந்து கேட்கட்டும்
கடை கண்ணிகளில் வியாபாரம் நன்கு செழிக்கட்டும்
கருணை மிகுந்து மழைமேகங்கள் இங்கு பொழியட்டும்
ஜனங்கள் புத்தாடை உடுத்தி மனம் மகிழட்டும்
ஜெகமெங்கும் தீபாவளி திருநாள் துவங்கட்டும்