முட்டாசுத் தீபாவளி

நெருப்பின்றிச்
சுத்துதடி
நேத்திரங்கள் சக்கரமாய்
*
இல்லாத சாட்டையினை
இமைத் திரைகள்
நீட்டுதடி
*
ஒரு கோடிப்
பூவானம்
ஒயிலான
புன்னகையில்
*
பற்றவைக்கும்
பார்வையென
வெடிந்த பின்னே
புரிந்துகொண்டேன்
*
முட்டாசுத்
தீபாவளி
உன் மத்தாப்பு
வாய் மொழியில்

...மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (8-Nov-15, 1:38 pm)
பார்வை : 1223

மேலே