என் மஞ்சம்

இரவின் கருமேகம்
அவன் கத்திரித்த
அளவான கூந்தல்

அவன்
இமைமூடி திறக்கும் நொடி
என் இரவு பகல்
அவன் சுவாசிக்கும்காற்று
எனக்கு மட்டுமான ஆக்ஸிசன்

அந்த உதடு
நான் தினம் காணும் பிறைநிலா...!

தோள்கள்
நான் உறங்கும் ஊஞ்சல்
இமயமலை
நெஞ்சம் கொஞ்சம் சரிய
மடியிலே எனக்கொரு
சொர்க்கம் படைத்து
கால்கள் எனும் சக்கரத்தை
சுழல விட்டு
அவன் கரத்தை
என் மஞ்சமாய்
மாற்றி விட்டான்...

எழுதியவர் : ஏஞ்சல் (8-Nov-15, 4:25 pm)
சேர்த்தது : ஏஞ்சல்
Tanglish : en manjam
பார்வை : 106

மேலே