எதிர் பாராத மரணம்

சீர்காழி பக்கத்தில் ஒரு அழகான கிராமம்.அந்த கிராமத்தில் வினய், அஷ்வின் என இரண்டு நண்பர்கள்.அவர்கள் ஒருவருக்கொருவர் உயிரை கொடுக்கும் அளவுக்கு நண்பர்களாக
இருந்தனர்...இவர்களில் அஷ்வினுக்கு படிப்பு ஏறவில்லை...ஆனால் வினய் படிப்பில் படிப்படியாக முன்னேறி கொண்டே இருந்தான்...ஆனால் இவர்களின் நட்பு மட்டும் அப்படியே இருந்தது..... ஒரு நாள் படிப்பின் காரணமாக
வினய் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அவன் படிப்பு முடிய மூன்று வருடம் பிறகு அங்கேயே இரண்டு வருடம் பயிற்சி... அதனால் பிரிய முடியாமல் அன்று முழுதும் அவர்கள் பேச, சிரிக்க மனமில்லாமல் சுற்றிகொண்டிருந்தனர்.இருந்தாலும் பிரிவது காலத்தின் கட்டாயம் என புரிந்து கொண்டு....பிரிய தொடங்க ஆரம்பிக்க தொடங்கிவிட்டனர்.பிரிவின் நேரம் அவர்களை நெருங்க நெருங்க அவர்களால் ஒன்றும் புரியாமல் கண்ணீரில் தத்தலிதனர்,..சரி உன்னை இரயில் நிலையத்தில் விட்டு விட வருகிறேன் என அஷ்வின் சொல்ல. சரி வா என வினய் கூறினான். இருவரும் வைத்தீஸ்வரன் கோவில் ரயில்வே நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். போகும் வழியில் அவர்கள் பள்ளிகளில் ஏற்பட்ட சம்பவங்கள்... மறக்க முடியாத நிகழ்வுகளை நினைவு கூர்ந்து சென்றுகொண்டிருதனர். கடைசியில் ரயில்வே நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். காலம் சிறு நிமிடங்களாக்கியது. நிமிடங்கள் சிறு நொடிகளாக்கியது. ஆம் இருவரும் பிரிய தொடங்கிவிட்டனர்..இரயிலில் ஏறி அமர்ந்துகொண்டான். இருவரும் கண்ணீரில் விடைசொல்ல... ரயிலும் புறப்பட ஆரம்பித்தது..இருவரும் கடைசி விடை சொல்ல...இரயில் வேகமாய் செல்ல...அஷ்வின் கொஞ்ச நேரம் அங்கேயே இருந்து விட்டு கிளம்பினான்...அவன் நினைவுகளால் அவன் சென்று கொண்டிருக்க. எதிர் வரும் வாகனம் அவன் கண்ணுக்கு தெரியாமல் போனது. எதிரில் ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருக்க. இவன் கவனிக்காமல் சென்றுகொண்டிருந்தான்...அருகே லாரி வருவதை உணர்ந்து.... திடிரென வண்டியை கீழே இறக்க முயன்று கீழே விழுந்தான்...எந்த ஒரு காயமும் இல்லாமல் ஒரு நிமிடம் எழுந்து மயங்கி விழுந்து விட்டான். அவனை பக்கத்தில் இருபவர்கள் உடனே அவனை மருத்துவ மனையில் அனுமதிக்க...சிகிச்சை பலனின்றி அவன் பரிதாமக உயிரிழந்தான். மறுநாள் இந்த செய்தி அடைந்த வினய் உடனடியாக கிளம்பி வந்தான். அஷ்வினின் உடல் அவன் வீட்டில் வைக்கபட்டது...அதை பார்த்த வினய் ஒரு நிமிடம் சிலை போல ஆனான். அஷ்வினின் அம்மா வினையை பார்த்து அழ. அவன் அப்போதும் சிலையாய் நின்றுகொண்டிருந்தான். எல்லோரும் அவனை பார்த்து முனுமுனுத்து கொண்டிருந்தனர். அன்று அவன் அப்படி இருந்தவன் தான் இதுவரை அவன் அப்படிதான் இருகிறான். அன்றுதான் உணர்ந்தேன் அன்பின் விளைவு இதுவேன்று. எதிர் பாராத மரணம் இன்று இருவருக்கும் நடந்தது..

எழுதியவர் : மணிமாறன் (8-Nov-15, 4:53 pm)
சேர்த்தது : drums mani
பார்வை : 191

மேலே